மழை நீர் சேமிப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! | Rain water storage case: Chennai High Court orders the Tamil Nadu government | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

மழை நீர் சேமிப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

August 10, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1073 Views

மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத  கட்டிடங்களுக்கு உரிய அபராதம்  விதிப்பது தொடர்பாக பரீசிலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் தியாகராஜன் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை உருவாக்க வேண்டும் என கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த அரசின் உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத  கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என விதி உள்ள நிலையில்,  அண்மைக் காலங்களில் எந்த ஒரு கட்டிடங்களும் இதுபோல மழைநீர் சேமிப்பு வசதியை ஏற்படுத்துவதில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.  

மேலும், மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத  கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் , நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலித்து எட்டு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )