இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்ட விவகாரம்; மு.க.ஸ்டாலின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

August 10, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2189 Views

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்ட விவகாரத்தில், மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காழ்ப்புணர்ச்சியால் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்ததாக, நச்சுக் கருத்தை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஸ்டாலினின் குற்றச்சாட்டும், பழிச்சொல்லும் கண்டு உள்ளம் பதைபதைக்கிறது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  நல்லடக்கம் நடைபெறுவதில் இடர்ப்பாடு வந்துவிடக் கூடாது என்பதற்காக, கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தமிழக அரசு முன்வந்ததாகவும், அமைச்சர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அதிமுக அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம், திமுகவுக்கு புரியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சிறையில் தள்ளி சித்ரவதை செய்தவர்கள் திமுகவினர் எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், திமுகவினரின் குற்றச்சாட்டுகளுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் கலங்க மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )