இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

சட்டவிரோதமாக விற்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்!

August 10, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1230 Views

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சட்டவிரோதமாக விற்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து நெல்லை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது கள்ளம்புளி என்ற கிராமத்தில் முள் புதருக்குள் இருந்து ஆட்கள் செல்வதைக் கண்ட போலீசார், அங்கு சென்றுள்ளனர்.

அப்பகுதியில் போலீசார் சோதனையிட்ட போது மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 16 சாக்கு மூட்டைகளில் இருந்த மதுபாட்டில்களைக் கைப்பற்றியதாகவும், இதன் மொத்த மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்றும் தெரிவித்துள்ள போலீசார், இது தொடர்பாக வேலப்ப நாடானூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )