இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​ கடலூர்: அலமேலுமங்கை உடனுறை பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தின் சிறப்புகள்!

August 10, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
932 Views

கடலூர் ஸ்ரீஅருள்மிகு அம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலுமங்கை உடனுறை பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தின் சிறப்புகள்.

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து, ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் நெல்லிக்குப்பம் எல்லை தொடங்கும் பகுதியில் அமைந்துள்ளது  பூலோகநாதர் கோவில்.  சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயம்,  ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. மனிதப் பிறப்பின் சிறப்பை உணர்த்தும் வகையில்,  தனித்தன்மையுடன் இந்த பூலோகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில்,  ஒரே இடத்தில் சிவனையும்  வெங்கடா ஜலபதியையும் இக்கோவிலில் வழிபடலாம்.

மண்ணுக்கு அதிபதி பூலோகநாதர்  என்பதால், மண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவானாலும், இந்த கோவில் மண்ணை எடுத்துச் சென்று வழிபட்டால், எளிதில் பிரச்சனைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும்  தடைபட்ட கட்டுமான பணிகள் எதுவானாலும், இங்கு வந்து பூஜை நடத்தினால், அந்த கட்டிடம் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. மேலும், வீடுகட்ட விரும்புவோர் இந்த ஆலயத்தில் கற்களை அடுக்கி வேண்டிக்கொண்டால், உடனே வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும் கூறுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள்.

இவ்வாலயத்தின் கன்னி மூலையில் சொர்ண விநாயகரும், வருணபாகத்தில் முருகப்பெருமான் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கின்றனர். வாயு பகுதியில் விஷ்ணுதுர்க்கை தாமரை மலர் மீது நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். இக்கோவிலில், ஒரே இடத்தில் நின்று ஒன்பது கோபுரங்களையும் ஒருசேர தரிசனம் செய்யலாம். தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் ஈசானிய பகுதியில் நவக்கிரகங்களும் உள்ளன. நவக்கிரகங்கள், கால பைரவர், பாலமுருகன், சண்டிகேஸ்வரர் என 9 சந்நிதிகள்  உள்ளன. 

ஆண்டு முழுவதும் பல விசேஷங்கள் இருந்தாலும்,  ஆடி மாத திருக்கல்யாணம் விமரிசையானது. மாதம் தோறும்  நடைபெறும் நாட்டியஞ்சலி,  பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். புரட்டாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி அன்று நடைபெறும் நாட்டியாஞ்சலி மற்றும் பரிவார மூர்த்திகள் வீதி உலா, ஆறு கால பூஜைகள் பிரசித்தமானதாகும்.

நவகிரகங்களில் ராகு, கேது, சனி கிரகங்கங்களின் பெயர்ச்சியின்போது சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இப்பூஜையில் கலந்து கொண்டால், நவக்கிரகங்களின் பாதிப்பிலிருந்து பூலோகநாதர் காப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )