முகப்பு > தமிழகம்

விவசாயி தற்கொலைக்குக் காரணமான வங்கி மேலாளரைக் கைது செய்ய வேண்டும்: வைகோ

March 10, 2017திருநெல்வேலியில் விவசாயி தற்கொலைக்குக் காரணமான வங்கி மேலாளரைக் கைது செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த விவசாயி வேம்பு கிருஷ்ணன், கடன் தொல்லையால் மனமுடைந்து நஞ்சு அருந்தித் தற்கொலை செய்துகொண்டதைக் குறிப்பிட்டுள்ளார். 

விவசாயி வேம்புகிருஷ்ணனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி, அவரைத் தற்கொலைக்குத் தள்ளிய மானூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். 

பெரும் நிறுவனங்களின் பல லட்சம் கோடி ரூபாய் வராக் கடனைத் திரும்பப் பெறத் திராணியற்ற வங்கிகள், எளிய விவசாயிகளை மிரட்டுவதும், அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டி விடுவதும் கடும் கண்டனத்துக்கு உரியது எனக் குறிப்பிட்டுள்ளார். 

விவசாயி வேம்புகிருஷ்ணன் குடும்பத்துக்குக் கருணைத்தொகையாக 25 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்