இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ..!

March 1, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2909 Views

திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுபேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டிற்கும் மேலாக உடல் நலக்குறைவால் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். மேலும் அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், பேசுவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கருணாநிதியின் தொண்டர்கள் மிகுந்த வருத்ததில் இருந்தனர். 

தமிழக அரசியலில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை ஆட்சி செய்தவர், அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக இருந்தவர், இப்போது உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பலர் தமிழக அரசியலில் காலூன்றி ஆட்சியை பிடித்துவிடலாம் என எண்ணி அதற்கான ஆயத்தங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். 

கடந்த ஓராண்டு காலமாக தனது வீட்டை விட்டு வெளிய வராமல் இருந்த கருணாநிதி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவாலயத்திற்கு வந்து பார்வையிட்டு பின்னர் தனது தொண்டர்களையும் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து ஜனவரி மாதம் தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்தார். 

இந்நிலையில் கருணாநிதி தனது கொள்ளுபேரனுடன் பிளாஸ்டிக் பந்து மட்டும் பேட்டைக்கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதில் கருணாநிதியின் கொள்ளுபேரன் பேட்டிங் செய்ய, கருணாநிதி பந்தை வீசுகிறார். தனது 93 வயதிலும் கொள்ளுபேரனுடன் கிரிக்கெட் விளையாடி தான் இன்னும் ஆரோக்கியமாக இருப்பதையும், நல்ல உடல்நலம் பெற்றிருப்பதையும் உறுதி செய்துள்ளார். இதனால் அவர் மீண்டும் மேடைக்கு வந்து “என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே” எனக்கூறும் நேரம் வெகு தொலைவில் இல்லை என அவருடைய ஆதரவாளர்களும், தொண்டர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)