முகப்பு > தமிழகம்

​‘மேகம் கருக்குது... மழை வரப்பாக்குது... வீசியடிக்குது காத்து...’!

September 24, 2017

​‘மேகம் கருக்குது... மழை வரப்பாக்குது... வீசியடிக்குது காத்து...’!


காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திர கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரை உள்தமிழகம் வழியாக மண்டல கீழ் அடுக்கில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது.

அதேநேரம், வளிமண்டல மைய பகுதியில் வட தமிழகத்தில் இருந்து லட்சத்தீவுகள் வரை கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்