இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

October 11, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2929 Views

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே கரையை கடந்துள்ள நிலையில் அதி தீவிர புயலாக இருந்த டிட்லி தற்போது தீவிர புயலாக மேற்கு வங்கம் மற்றும் கங்கை சமவெளி பகுதியில் நிலை கொண்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையும் என்றும், இந்த மாற்றங்களால் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. 

அதே நேரம் தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )