இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

காமன்வெல்த் 2018 - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை !

April 16, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4768 Views

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

அதன்படி,  டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் முறையே வெள்ளி, வெண்கலம் வென்ற சத்தியனுக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் அறிவித்துள்ளார். 

டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர், தனிநபர் பிரிவுகளில் முறையே வெள்ளி, வெண்கலம் வென்ற சரத் கமலுக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெள்ளி பதக்கங்கள் வென்ற தீபிகா கார்த்திக்கிற்கு ரூ. 60 லட்சம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்குவாஷ் ஆடவர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்ற சவுரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சம் பரிசுத் தொகையை முதல்வர் அறிவித்துள்ளார்.  

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சம்  ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 23
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )