முகப்பு > தமிழகம்

திருமண விழாவில் ஆவேசமாக அரசியல் பேசிய கமல்..!

August 30, 2017

திருமண விழாவில் ஆவேசமாக அரசியல் பேசிய கமல்..!


கோவையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பல அரசியல் கருத்துக்களை நடிகர் கமல் ஆவேசமாக பகிர்ந்துகொண்டார்.

கோவையில் ஈச்சனாரியில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய  பொருளாளர் தங்கவேல் வீட்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கமல், “என்னை பார்த்து இந்த சமூகத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் எனக்கு கோபம் வரும். நாம் நமது வேலையை செய்வோம், தேவை வரும் போது கோட்டை நோக்கி புறப்படுவோம். ஆனால் இந்த அரசியலைக் இப்படியே விட்டு வைக்க கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போதே  நீ தவறு செய்துவிட்டாய். வெறும் சொத்து சேத்து வைத்தால் மட்டும் போதாதது அதைக் மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

இதை திருமண விழாவாக நான் நினைக்கவில்லை .இது ஆரம்ப விழாவாக எண்னுகிறேன். இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டு இருக்கிறது, தொடர்ந்து போராடுங்கள், உங்கள் கையைக் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். என்னை பார்த்து கேட்கிறார்கள் தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா என்று, நான் கேட்கிறேன் உங்களுக்கு தலைமை ஏற்க தைரியம் வந்துவிட்டதா?. அரசியல் சூழலைக் இப்படியே விட்டு வைக்காமல் அதை மாற்ற வேண்டியது நமது கடமை. தமிழகத்தைக் சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுவோம்” என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய கமல் ரசிகர்கள், கமலின் பேச்சு அரசியலுக்கு வருவதற்கான சூழல் இருப்பதாக இருக்கிறது எனவும் அவரின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்து செல்வோம் எனவும் தெரிவித்தனர். 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்