முகப்பு > தமிழகம்

நாளை மறுநாள் முதல்வர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

September 03, 2017

நாளை மறுநாள் முதல்வர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!


நாளை மறுநாள் சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில், வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் மனு அளித்த நிலையில், தற்போது புதுச்சேரியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்ககும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்