இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

பொதுவாழ்வில் இருந்து விலகிய பின்பும் என் மீது அவதூறு வழக்கு தொடர்வது ஏன் - நாஞ்சில் சம்பத் கேள்வி!

August 3, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
15160 Views

பொதுவாழ்வில் இருந்து விலகிய பின்பும் தன் மீது அவதூறு வழக்கு தொடர்வது ஏன் என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் கடந்த ஜனவரி 21ம் தேதி அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக நாஞ்சில் சம்பத் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக கடலூர் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் இன்று ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது வாழ்விலிருந்து விலகி ஆறு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், இவ்வழக்கு ஜூன் மாதம் பதிவுசெய்யப்பட்டு தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அவர் நீதிமன்றம் வரும்போது திமுக கொடி பொருந்திய வாகனத்தில் வந்ததால் எதிர்காலத்தில் திமுகவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு அந்த வாகனம் நண்பரின் வாகனம் என்றும் நட்பு அடிப்படையில் இந்த வாகனத்தில் வந்ததாக தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )