எனது எஞ்சிய நாட்களை, மக்களுக்கு சேவை செய்ய செலவழிக்கப்போகிறேன் - கமல்ஹாசன் | I am going to spend my remaining days serving people - Kamal Hassan | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

எனது எஞ்சிய நாட்களை, மக்களுக்கு சேவை செய்ய செலவழிக்கப்போகிறேன் - கமல்ஹாசன்

May 17, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2070 Views

எனக்கு முழு அதிகாரம் கொடுத்தால், மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன் என, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் சார்பில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தில்  மீனவ மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, மணப்பாடு கிராமத்தில், அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறிய அரசு, அவற்றை செய்து கொடுத்ததா எனக் கேள்வி எழுப்பினார். மக்களுக்காக தன்னால் முடிந்தவற்றை செய்வேன் எனக் கூறிய கமல்ஹாசன், தமக்கு முழு அதிகாரம் கொடுத்தால், அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன் என, உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் சென்ற கமல்ஹாசனுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், திருச்செந்தூர் தேரடி திடலில் பேசிய கமல்ஹாசன்,

எனது எஞ்சிய நாட்களை, மக்களுக்கு சேவை செய்ய செலவழிக்கப்போவதாக குறிப்பிட்டார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )