இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

போக்குவரத்து கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக எந்த உறுதியையும் கொடுக்கவில்லை முதல்வர் - மு.க.ஸ்டாலின்

February 14, 2018 Posted By : elango Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2468 Views

போக்குவரத்துக் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக முதல்வர் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தியதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போக்குவரத்து கழகத்தின் நிர்வாகத்தை சீரமைப்பது மற்றும் லாபகரமாக இயக்குவது தொடர்பாக அறிக்கை தயாரிக்க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டது.

திமுக சார்பாக தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை கட்சியின் செயல் தலைவர்  ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் சென்று முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினார். சந்திப்பின்  போது துணை முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தார்கள். 

முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்க வலியுறுத்தியுள்ளதாகவும், திமுக அளித்த 27 பரிந்துரைகளை அமல்படுத்தினால் போக்குவரத்து கழகத்தை லாபகரமாக இயக்க முடியும் என்றும் தெரிவித்தார். போக்குவரத்து கழகத்தின் இழப்பீட்டை அரசே ஏற்க வேண்டும் என தெரிவித்த அவர், கட்டணத்தை குறைப்பது தொடர்பாக முதல்வர் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என்றார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )