முகப்பு > தமிழகம்

​ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அனிதா மரணத்திற்குகூட வரமுடியாதவர்கள்!ஆட்சியைக் கலைக்க தயார் - தினகரன் ஆவேசம்

September 12, 2017

​ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அனிதா மரணத்திற்குகூட வரமுடியாதவர்கள்!ஆட்சியைக் கலைக்க தயார் - தினகரன் ஆவேசம்எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து நடத்திய பொதுக்குழுக்கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், டிடிவி தினகரன் வெளியிட்ட நியமன மற்றும் நீக்க அறிவிப்புகள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்பிறகு, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “ இது வெறும் கூட்டம். பொதுக்குழு அல்ல. இந்த கூட்டத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பொதுமக்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் அனைவருமே இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றே கருதுகின்றனர். ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் இடத்தில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், ஜெயலலிதா இருந்த முதல்வர் ஆக இருந்த இடத்தில், அந்த சிம்மாசனத்தில் ஓ,பி.எஸ்-ஐயோ, இ.பி.எஸ்-யோ வைத்து பார்க்க முடியவில்லை என்றே மக்கள் கருதுகிறார்கள். இவர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவுசெய்துவிட்டோம். அன்பு மகள் அனிதா இறப்பிற்கு கூட இவர்களால் வர முடியவில்லை. இவர்களா மக்களை காப்பாற்ற போகிறார்கள்? அனிதா இறப்பிற்கு சென்ற இடத்தில் கூட இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பு என்றே அந்த கிராம மக்கள் என்னிடம் கூறினார்கள். நாங்கள் திமுகவுடன் இணைந்து செயல்படுவதாக புரளிகிளப்புகிறார்கள். தேர்தல் வந்தால், எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி. இந்த ஆட்சி நீடிக்க நீடிக்க எங்கள் கட்சி அழிந்துவிடும். ஆட்சியிலிருந்து இறங்கமாட்டேன் என்பவர்களை இழுத்து தூக்கிப்போட வேண்டும். தங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்று சொல்லும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தேர்தலைச் சந்திக்க தயாரா?” என்று கூறினார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்