முகப்பு > தமிழகம்

பொறுப்பு ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

September 10, 2017

பொறுப்பு ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!


தமிழக அரசை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென பொறுப்பு ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக அரசை உடனடியாக சட்டமன்றத்தைக்கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென பொறுப்பு ஆளுநரை இன்று மு.க.ஸ்டாலின் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களோடு நேரில் சந்தித்து வலியுறுத்தி கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தில், “அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படியும் ஜனநாயக அடிப்படையின்படி, உடனடியாக எந்தவித தாமதமும் இல்லாமல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது. இந்த பெரும்பான்மையில்லாத அரசு இனியும் தொடர தாங்கள் அனுமதித்தால், அது பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கங்களுக்கும் அரசியலமைப்பின் அடிப்படை கருத்துகளுக்கும், மாண்பமை உச்சநீதிமன்றம் இது போன்ற விஷயங்களில் இதுவரை அளித்துள்ள தீர்ப்புகளுக்கும் எதிரானதாகும்.

பெரும்பான்மையில்லாத அரசு தொடர்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டை தோற்கடிக்க வழிவகுக்கும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதில் ஏற்படும் சிறு தாமதம் கூட, தமிழகத்தில் ‘குதிரை பேர’த்தை ஊக்குவிப்பதோடு, முறையற்ற அரசியல் நடவடிக்கைகள் மாநிலத்தில் நடைபெற வழிவகுத்து விடும்.‬

இதுவரையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடாமல் தவிர்ப்பது, தங்களுடைய செயல்பாடுகளில் பாரபட்சமிருப்பதாக வலுவான சந்தேகம் எழுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சி என்பதைதான் குறிப்பிடுகிறது என்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.‬ எனவே உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி தலைமையிலான தமிழக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
‪ ‬

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்