முகப்பு > தமிழகம்

​தமிழகத்தில் பெட்ரோல், டீசல் வாட் வரியைக் குறைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

October 11, 2017

​தமிழகத்தில் பெட்ரோல், டீசல் வாட் வரியைக் குறைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த திமுக ஆட்சி காலத்தில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜகவின் தலையாட்டி பொம்மையாக செயல்படும் தமிழக அரசிற்கு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் படும் துயரங்கள் பற்றி கவலையில்லை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்