முகப்பு > தமிழகம்

நாளை குடியரசுத்தலைவர் தேர்தல்!

July 16, 2017

நாளை குடியரசுத்தலைவர் தேர்தல்!

குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை  தலைமைச் செயலகத்தில் தேர்தல் பார்வையாளர் அன்ஷூ பிரகாஷ், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளைப் பார்வையிட்டார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, புதிய குடியரசுத் தலைவரை செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர். இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினர். வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களிப்பதற்காக, வாக்குப்பெட்டிகள் சென்னை வந்து சேர்ந்தன. 

தேர்தல் பார்வையாளராக சென்னை வந்துள்ள அன்ஷூ பிரகாஷ், தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, கூடுதல் காவல் ஆணையர் ஜெயராம், சட்டப் பேரவை செயலாளர் பூபதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, குடியரசு தலைவர் தேர்தல் விதிமுறைகள் மற்றும் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள் குறித்த பதாகைகள் சட்டப்பேரவை  வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன.  தேர்தலில் வாக்களிப்பது குறித்தும், வாக்களிக்கும் அறையில் எடுத்து செல்ல வேண்டிய விவரங்கள் குறித்தும், எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றியும் இந்த சுவரொட்டியில் விவரிக்கப்பட்டுள்ளன. வாக்களிக்கும் இடமான சட்டப்பேரவை கூட்டரங்கை சுற்றியும் இந்த பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்