முகப்பு > தமிழகம்

1500 கோடி ரூபாய் வசூலை தாண்டிய பாகுபலி-2

May 19, 2017

1500 கோடி ரூபாய் வசூலை தாண்டிய பாகுபலி-2


வெளியான அத்தனை மொழிகளிலும் சக்கைபோடு போட்ட பாகுபல்லி -2 படத்தின் வசூல் 1500 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், தமனா, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ஆகியோர் நடிப்பில் 4 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது பாகுபலி 2. உலகம் முழுவதும் 9000 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்திய மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பாகுபலி முதல் வாரத்தில் அந்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

அதேபோன்று இந்தியா முழுவதும் வெளியான பாகுபலி-2 முதல் வாரத்தில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில், இன்று வெளியான தகவலிபடி பாகுபலி-2, இதுவரை 1500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், படம் வெளியாவதற்கு முன்பே பாகுபலி 2-இன் சாட்டிலைட் உரிமம் 51 கோடி ரூபாய் விற்கப்பட்டுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மொத்தம் 450 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்