இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

கமல்ஹாசனின் "விஸ்வரூபம்-2" திரைப்படத்திற்கு தடை: உயர்நீதிமன்றத்தில் வழக்குபதிவு!

August 2, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2634 Views

கமல்ஹாசனின் "விஸ்வரூபம்-2" திரைப்படத்திற்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

2008-ஆம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு, பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக, 6.90 கோடி ரூபாயும், படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. ஆனால் மர்மயோகி படத்தை தயாரிக்காமல் அந்த பணத்தை, "உன்னைபோல் ஒருவன்" படத்திற்கு கமல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 6.90 கோடியை கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் 4 கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து, 5.44 கோடியை கொடுக்காமல், விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனம் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )