முகப்பு > தமிழகம்

கடைசி தமிழனின் ரத்தம் எழும், வீழாதே... இணையத்தை மெர்சலாக்கும் பாடல்!

August 10, 2017

 கடைசி தமிழனின் ரத்தம் எழும், வீழாதே... இணையத்தை மெர்சலாக்கும் பாடல்!


விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் மெர்சல். 130 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் பாடல் வரும் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக தமிழாலே ஒன்றிணைந்தோம் எனும் பாடலின் முன்னோட்டம் நேற்று இரவு வெளியாக 15 நிமிடங்களில் 2 லட்சம் viewsகளை கடந்து இணையத்தில் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் இப்பாடலின் முழு ஆடியோ (single track) சற்று முன்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கைலாஷ்கர், தீபக், சத்தியபிரகாஷ், ஏ.வி.பூஜா ஆகியோர் பாடிய இந்த பாடல் இணையத்தை தற்போது மெர்சலாக்கி வருகிறது.

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே, வெற்றிமகன் வழிதான் இனி எல்லாமே, வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே சொன்னானே, வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே... என அதன் பாடல் வரிகள் அமைந்துள்ளது. தமிழ் கலாச்சாரம், தமிழக அரசியல், ஜல்லிக்கட்டு உள்ளிட்டவைகளைப் பற்றி பாடல் வரிகள் அமைந்துள்ளதால், மெர்சல் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்