முகப்பு > தமிழகம்

​முதல்வன் 2.0 படத்தில் அஜித்?

September 13, 2017

​முதல்வன் 2.0 படத்தில் அஜித்?முதல்வன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க அஜித்தை அணுகியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கும் முதல்வன் திரைப்படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பதற்காக அஜித்தை சந்தித்து கதை கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் பொய் என தெரிய வந்துள்ளது. ‘அஜித் தற்போது முழு ஓய்வில் உள்ளதாகவும், ஷங்கர் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலையில் தீவரம் காட்டி வருவதாலும், முதல்வன் படத்தின் 2ம் பாகத்திற்கான கதையை கூறியிருக்க வாய்பில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்த படத்திற்கு பாகுபலிக்கு கதை எழுதிய புகழ்பெற்ற கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் கதை எழுதி வருகிறார். இப்படத்தைக் குறித்த தகவல்கள் வெளியான நேரம் தொட்டே இந்தப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், ரஜினி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

சமூகவலைதளங்களில் இதற்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளிலும் விஜய் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றே வாக்களித்து இருந்தனர். இந்நிலையில், இப்படத்தில் அஜீத் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி அது மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்