இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​நில விற்பனை தொடர்பான வழக்கு: நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம்!

July 26, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3466 Views

நில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 1993ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் இரும்புலியூரில் உள்ள தனது 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றார். பின்னர் இந்த கடன் தொகையை செலுத்தாததால் அவரது நிலம் ஏலம் விடப்பட்டது. பின்னர் ராமச்சந்திரன் இறந்த நிலையில் அவரது குடும்பத்தார் நடிகர் சிங்கமுத்து மூலமாக இந்த நிலத்தை நடிகர் வடிவேலுவிற்கு விற்றுள்ளனர். இந்த நிலையில் பழனியப்பன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் நடிகர் வடிவேலு நிலத்தை அபகரித்து விட்டதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பழனியப்பனிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த அனைத்து வழக்குகளும் நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நில பிரச்னை தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் பழனியப்பன் இடையே சமரசம் ஏற்பட்டு, பழனியப்பன் தரப்பில் வடிவேல் தரப்பினருக்கு 85 லட்சம் ரூபாய்க்கான  வரைவோலையை அளிக்கபட்டது. இதனையடுத்து பழனியப்பனிடம் நஷ்ட ஈடு கோரிய மனுவை நடிகர் வடிவேலு திரும்ப பெற்றுக் கொண்டார். இதனால் அனைத்து வழக்குகளையும் நீதிபதி முடித்து வைத்தார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )