முகப்பு > தமிழகம்

புதிய புகைப்படங்களுடன் சீறும் மெர்சல் பாடல்

August 11, 2017

புதிய புகைப்படங்களுடன் சீறும் மெர்சல் பாடல்


மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கிறது.

விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் மெர்சல். 130 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக தமிழாலே ஒன்றிணைந்தோம் எனும் பாடலின் முன்னோட்டம் கடந்த 10ம் தேதி வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. இதையடுத்து மறுநாளே ஆளப்போறான் தமிழன் பாடலின் முழு ஆடியோ வடிவம் வெளியாகி, விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது.

குறிப்பாக, தமிழர் கலாச்சாராம், பண்பாடு, அரசியல், ஜல்லிக்கட்டு உள்ளிட்டவைகளைப் பற்றிய வரிகளுடன் இப்பாடல் வெளியானதால் தமிழ் மக்களின் மனதிற்கு நெருக்கமான பாடலாக இது கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில், படத்தின் சில புதிய புகைப்படங்களின் இணைப்புடன் ஆளப்போறான் தமிழனின் பாடலின் வரிகளுடன் தற்போது வீடியோ வடிவமாக இப்பாடல் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கிறது.

 

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்