இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

நாதெள்ளா நகைக் கடையின், 328 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!

August 2, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
14027 Views

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சென்னையில் உள்ள நாதெள்ள சம்பத் நகைக்கடைகள் உள்பட 328 கோடி ரூபாய் மதிப்புள்ள 37 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாதெள்ள சம்பத் நிறுவனம் போலியான ஆவணங்கள் மூலம், எஸ்.பி.ஐ. வங்கியில் 278 கோடியே 31 லட்சம் ரூபாயும், இந்தியன் யூனியன் வங்கியில் 56 கோடியே 84 லட்சம் ரூபாயும், HDFC வங்கியில் 40 கோடியே 60 லட்சம் ரூபாயும் கடன் பெற்றுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாதெள்ள சம்பத் நகை நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை தியாகராயநகர், மயிலாப்பூர், அண்ணாநகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக் கடைகள் அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதோடு, நாதெள்ள சம்பத் குடும்பத்தினருக்கு சொந்தமான கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீடு, உத்தண்டியில் உள்ள பண்ணைவீடு, கோயம்பேட்டில் உள்ள திருமண மண்டபம் உட்பட 328 கோடி ரூபாய் மதிப்புள்ள 37 அசையா சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )