இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? 2–வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்!

August 9, 2018 எழுதியவர் : wasim எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4167 Views

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில்,  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது. 

இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டனர். லார்ட்ஸ் மைதானம் எப்பொழுதுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட்கோலி, முதல் இன்னிங்கிசில் சதமும், இரண்டாவது இன்னிங்சில் அரைசதமும் கடந்து தனது பார்மை நிரூபித்துள்ளார். இதேபோன்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினும் 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். 

லார்ட்ஸ் மைதானத்தில்  கடந்த 1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான அணியும், கடந்த 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான அணியும் இங்கிலாந்து அணியை வென்றதை போன்று, தற்போது கேப்டன் விராட்கோலி தலைமையிலான அணியும்  வெற்றி பெறும்  என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )