இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​தமிழ்நாடு வரைபடத்த தலைலயே வரைஞ்சுக்கிட்டியா? - காயம்பட்ட ஹைடனை கலாய்த்த ஜாண்டிரோட்ஸ்!

October 9, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
24488 Views

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்னணையாளராக இருந்து வருகிறார்.

இந்தியாவின் புகழ்பெற்ற ஐபிஎல் டி-20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் அவர் விளையாடியுள்ளார். இதன் மூலம் சென்னை அணி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நபராகவும் விளங்கி வருகிறார் ஹைடன்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது மகனுடன் குயின்ஸ்லாந்து கடற்கறைக்கு சென்ற போது அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஹைடன், எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் சிக்கினார்.

இதில் அவருக்கு முதுகு, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டதுடன் எழும்பு முறிவும் ஏற்பட்டது. 

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மேத்யூ ஹைடன், காயம்பட்ட தனது புகைப்படத்தை ”மயிரிழையில் உயிர் தப்பினேன்” என்று குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் மிகவும் வைரலாகியதுடன் அவரது கிரிக்கெட் நண்பர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் ஜாம்பவனாக திகழ்ந்த ஜாண்டி ரோட்ஸ், காயம்பட்ட மேத்யூ ஹைடனை கலாய்த்து அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அதில், “ஹைடன், உங்கள் முன்தலையில் அணிந்திருப்பது தமிழ்நாட்டின் வரைபடமா (Map)? உண்மையான அர்ப்பணிப்பு நண்பா!!! நம்மில் சிலர் டாட்டூ போன்ற எளிய வழிகளையே தேர்ந்தெடுப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவரது தலையில் இருக்கும் காயத்தை தமிழ்நாட்டின் வரைபடத்துடன் ஜாண்டி ரோட்ஸ் ஒப்பிட்டு, தமிழக ரசிகர்களுடனான ஹைடனின் நெருக்கம் குறித்து கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மேத்யூ ஹைடன் சென்னை அணி ரசிகர்களுடன் அதிகமாக நட்பு பாராட்டியதுடன், தமிழக பாரம்பரிய ஆடைகளான வேஷ்டி, சட்டை அணிந்து தனது டிவிட்டரில் புகைப்படங்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )