இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி தடுமாற்றம்!

September 8, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3883 Views

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவலில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டி அலஸ்டயர் குக் பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டி என்பதால் அவர் களத்திற்குள் நுழைந்த போது, இந்திய வீரர்கள் இரு பக்கமும் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை அளித்தனர். மேலும், கேப்டன் கோலி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்

ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்ட நேர முடிவில் 198 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழந்திருந்தது. ஜோஸ் பட்லர் 11 ரன்களுடனும்,  அடில் ரஷித் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )