இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

இந்திய கிரிக்கெட்டின் ஆக்ரோஷ வீரர்: ‘தாதா’ கங்குலியின் பிறந்த நாள் இன்று!

July 8, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10028 Views

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பிறந்த நாள் இன்று.... இந்திய வீரர்களுக்கு ஆடுகளத்தில் ஆக்ரோஷத்தை கற்றுக்கொடுத்த அவரை பற்றிய ஒரு தொகுப்பு..

கங்குலி என்றவுடன் கண்முன்னே வரும் காட்சிகள் ஆக்ரோஷம். இந்த ஆக்ரோஷம் தான் கங்குலியை மற்ற இந்திய கேப்டன்கள் மத்தியில் தனித்துக் காட்டியது. இந்தியா இன்று கிரிக்கெட்டில் ஜாம்பவானாக வலம் வருவதற்கு கங்குலியின் ஆக்ரோஷம் தான் ஆரம்பப் புள்ளி... இதற்குப் பின் இந்திய கிரிக்கெட்டில் இடம்பிடித்த வீரர்கள் அனைவரிடமும் இதே ஆக்ரோஷம் பிரதிபலித்து வருகிறது.. 

கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அந்த கடவுளின் அரியணைக்கு சவால் விட்ட ஒரே வீரர் சவுரவ் கங்குலி. 90களின் முடிவில் சச்சின் என்ற சகாப்தத்திற்கு கிட்டத்தட்ட மூடுவிழா நடத்தியவர் இந்த பெங்கால் டைகர் கங்குலி...

முதன் முறையாக 1992ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 3 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. அத்துடன் கங்குலியின் அணுகுமுறை சரியில்லை என குற்றம்சாட்டிய கிரிக்கெட் நிர்வாகம் அவரை அணியில் இருந்து நீக்கியது. அதன் பிறகு இந்திய அணியில் கங்குலி இடம்பெற 4 ஆண்டுகள் ஆனது. 

இங்கிலாந்துக்கு எதிராக 1996ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கங்குலி வெறித்தனமாக விளையாடினார். அந்நிய மண்ணில் சதமடித்து அசத்தினார். தன்னை நீக்கிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பதில் தான் இந்த சதம் என பேசப்பட்டது. தொடர்ந்து அடுத்த டெஸ்ட் போட்டியிலும் சதமடித்தார்.

மேலும் இடது கை ஆட்டக்காரர்ரான கங்குலி களமிறங்கினால், மைதானத்தின் ஆஃப்சைட்டில் தான் மொத்த எதிரணியினரும் ஃபீல்டிங் செய்வார்கள். அப்படியிருந்தும் வீரர்களுக்கு நடுவே பவுண்டரிகளை விளாசி தள்ளுவார் கங்குலி. இதனால் ஆஃப்சைடின் கடவுள் என ரசிகர்களால் பிரியமுடன் அழைக்கப்பட்டார். 

விக்கெட்டை பறிகொடுத்துவிடுவோமோ என்ற அச்சத்தில் சிக்சர்கள் அடிப்பதற்கு வீரர்கள் அதிகம் அச்சப்பட்ட நிலையில் பந்தை பலமுறை மைதானத்திற்கு வெளியே அடித்து அசத்தினார் கங்குலி. கங்குலியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை ஆரவாரப்படுத்தியது. சச்சினை விட சிறந்த வீரர் கங்குலி என்ற விவாதங்கள் எழுந்தன...

இந்தியா என்றால் சச்சின் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும் என்றிருந்த எதிரணிகள், அதன்பின்னர் கங்குலியின் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என திட்டமிடவும் தொடங்கினர். கங்குலியின் இந்த வளர்ச்சிக்கு கிடைத்த பரிசு கேப்டன்ஷிப்... யாருமே நிகரில்லை என்ற பிம்பத்தில் ஆஸ்திரேலியா அணி வலம் வந்தபோது அந்த அணியை வீழ்த்தி இந்திய ரசிகர்கள் மறக்க முடியாத தருணத்தை தந்தவர் கங்குலி..

கேப்டனாக கங்குலி இருந்த போது, இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்ததுதான் தோனியும் கோலியும் இன்று வெற்றி மேல் வெற்றிகளை குவிப்பதற்கான முக்கிய காரணம் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து.

வங்கப்புலி, தாதா என செல்லமாக அழைக்கப்படும் கங்குலியின் 47வது பிறந்த நாளில் அவரின் சாதனைகளை நினைவுகூர்வோம்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )