இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி!

February 8, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6587 Views

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில்,124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 

கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை பேட் செய்ய பணித்தது. தொடக்க வீரர் ரோஹித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் ஷிகர் தவான் மற்றும் விராத் கோலி இருவரும் தென்னாப்பிரிக்க பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

76 ரன்கள் எடுத்த நிலையில் ஷிகர் தவான், மார்க்ரம் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தாலும், மறுபுறம் விராத் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 160 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 303 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்க தரப்பில் டுமினி இரண்டு விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் மற்றும் ரபடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, 304 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

179 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததன் மூலம் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

நேற்று நடந்த முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில், கடைசி

கோவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மற்றும்

வங்கதேச அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் இந்திய

ஊடகங்களில் மிகைப்படுத்திக் கூறப்படும் புகார்களுக்கு பதிலளிக்க

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)