இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி!

November 8, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5175 Views

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடர் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் மற்றும் இரண்டாம் போட்டியில் தலா ஒரு வெற்றியுடன் இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்தன. இந்நிலையில், மூன்றாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது.

மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மைதானத்தை பரிசோதித்த நடுவர்கள் போட்டியை எட்டு ஓவர்களாக குறைத்தனர். டாஸ்சில் வென்ற  நியூஸிலாந்து வீரர்கள் பந்து வீச்சை தேர்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த நிலையில், 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை எடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து வீரர்களை, இந்திய பச்சுவீச்சாளர்கள் திணறடித்தனர். இதனால் 8 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 61 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)