இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

விபத்தில் சிக்கிய முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் படுகாயம்

October 8, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
12560 Views

ஆஸ்திரேலியா அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான மாத்யூ ஹைடன் தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாண்ட் மாகாணத்தில் விடுமுறையை கழித்து வந்தார். இந்நிலையில், தனது மகனுடன் ‘சர்பிங்’ விளையாட்டில் ஈடுபட்டு வந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். 

கடந்த வார இறுதியில் ஏற்பட்ட இந்த கொடூர விபத்தில் அவரது தலை, கழுத்து பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது மேலும் முதுகு பகுதிகளில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவரே தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் சிறுது நாட்களுக்கு எனது கேம் ஓவர் எனவும், தான் மயிரிலையில் உயிர்தப்பியதாகவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 


46வயதான மாத்யூ ஹைடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் சமீபத்தில்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஹால் ஆப் பேமில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஹைடன், 103 டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்காக 8,625 ரன்கள் சேர்த்துள்ளார் அதில் 30 சதங்கள் அடங்கும்.   

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )