முகப்பு > விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

September 07, 2017

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!


இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 

கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி, தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய போதும், அடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முனிவீரா 53 ரன்களும், பிரியஞ்சன் 40 ரன்களும் எடுத்தனர். 

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, 19 புள்ளி 2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய கேப்டன் கோலி 82 ரன்களும், மணீஸ் பாண்டே 51 ரன்களும் குவித்து வெற்றி வித்திட்டனர்.

3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகளில் ஏற்கனவே இந்திய அணி வென்ற அணி, டி 20 போட்டியிலும் வெற்றி பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்