இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இந்தியா தோல்வி!

July 7, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3285 Views

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்செய்ய களமிறங்கிய இந்தியா, 22 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் கோலி, ரெய்னா மற்றும் டோனியின் ஆட்டத்தால் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. கோலி அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார். 

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர்களான ராய் மற்றும் பட்லரை, உமேஷ் யாதவ் வெளியேற்றினார். அடுத்து வந்த ஜோ ரூட்டும் விரைவாக ஆட்டமிழக்க, அலெக்ஸ் ஹேல்ஸ் ரன் குவிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். இதனால், இந்திய அணியின் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக கைநழுவத் தொடங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டபோது,  அலெக்ஸ் ஹேல்ஸ் சிக்சர்களை பறக்க விட்டார். இதனால், 2 பந்துகள் மீதமிருக்கும்போதே இங்கிலாந்து வெற்றி இலக்கை எட்டியது. கடைசி வரை களத்தில் நின்ற அலெக்ஸ், 58 ரன்கள் குவித்தார். 

மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தற்போது சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி, நாளை நடைபெறுகிறது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )