இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

December 7, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9859 Views

அடுத்த வருடம் நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாட தோனிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில்  ஆழ்த்தியுள்ளது. 

சூதாட்ட புகாரில் சிக்கி கடந்த 2 வருடங்களாக சஸ்பண்ட் செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தடை முடிந்து தற்போது மீண்டும் விளையாட அனுமதி பெற்றுள்ளது. அதன்படி 2018ம் ஆண்டு நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இவ்விரண்டு அணியும் கலந்து கொள்ளகிறது. 

மேலும் ஐ.பி.எல். களத்துக்குத் திரும்பும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. பி.சி.சி.ஐ. நிர்வாகத்தைக் கவனிக்கும் கமிட்டியினருடன், ஐ.பி.எல். நிர்வாகக் குழுவினர் டெல்லியில் நடத்திய 
ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தோனி, மீண்டும் அந்த அணிக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தோனி தவிர மேலும் இரு வீரர்களை, ஏலத்துக்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளமுடியும். இதற்கு சமூகவலைதளத்தில் வரவேற்பு வந்துள்ள நிலையில் தோனியுடன் 
ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தக்க வைக்க ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் யாரை தக்க வைக்க விரும்புகிறார்கள் சமூகவலைதளத்தில் உலா வரும் லிஸ்ட் இதோ,

➤தோனி
➤ரெய்னா
➤ஜடேஜா
➤பிரவோ
➤மெக்கல்லம்

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

இந்தியாவின் வேகப்பந்து வீச்சை பார்த்து பிரம்மித்து போனதாக

சென்னை அணி விளையாடாத இரண்டு ஆண்டுகள் என்னை மேலும் வலுவாக்கி

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2017 ஆம் ஆண்டுக்கான

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும், தென் ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரில் வெற்றி இலக்கை

தற்போதைய செய்திகள் Jan 21
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)