இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

டி-20 கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைபற்றியது இந்தியா!

November 7, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3513 Views

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில்  நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் 43 ரன்னில் அவுட்டானார். ஒருபுறம் நிலைத்து நின்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது. 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி இந்திய பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் நிலைகுலைந்தது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் ஒருவர் பின்னர் ஒருவராக ஆட்டமிழந்தனர். கடைசி வரிசை வீரர்கள் அதிரடி காட்ட வெஸ்ட் இண்டிஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரையும் கைப்பற்றியது

 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )