இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

மைதானத்தில் கண்ணாடி உடைந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்சரேக்கர்!

November 7, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3958 Views

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி பெயர் சூட்டப்பட்ட லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்சரேக்கர் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர்.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில்  நடைபெற்றது
மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 'அடல்பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்' என்ற பெயரிலான கிரிக்கெட் விளையாட்டு அரங்கங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்துவைத்தார்.

இந்நிலையில், ஸ்டேடியத்தின் கமெண்ட்ரி அறையில் இருந்த கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்சரேக்கர் உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.

இதனைதொடர்ந்து ,வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )