இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​ இந்திய அணியின் ஆபத்பாந்தவன் விராட் கோலி!

August 6, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4853 Views

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய வீரர் ஒருவர் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, கேப்டன் விராட் கோலி தான். இதுகுறித்த செய்தி தொகுப்பு.


விராட் கோலி எதிரணி வீரர்கள் கூட மெய் மறந்து பாராட்டக்கூடிய வீரர்களில் ஒருவர். ''சிறந்த பந்துவீச்சாளராக வேண்டுமெனில், கோலிக்கு எதிராக சிறப்பாக பந்து வீச வேண்டும்'' என, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது அமீர் பாராட்டியதே இதற்கு சாட்சி. 

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. எட்ஜ்பேஸ்டனில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், வெற்றிக்காக தனி ஒருவனாக போராடியவர் கேப்டன் கோலி. முதல் இன்னிங்சில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கோலி மட்டும் 149 ரன்கள் விளாசினார். மற்ற 10 வீரர்களின் ஒட்டுமொத்த ஸ்கோர் வெறும் 105 தான். இதேபோல் இரண்டாவது இன்னிங்சிலும் மற்ற வீரர்கள் நடையை கட்ட, கோலி மட்டும் பொறுப்பாக விளையாடி, அரை சதம் அடித்தார். 

இந்த சிறப்பான ஆட்டத்தால், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில், அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை இரண்டாவது இடத்துக்கு தள்ளியிருக்கிறார் கோலி. ஏற்கனவே வெங்சர்க்கார், சுனில் கவாஸ்கர், சேவாக், டிராவிட், கம்பீர், சச்சின் ஆகிய இந்திய வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தை கோலியும் அலங்கரித்துள்ளார்.

கடைசியாக இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போதைய நிலையில் 934 புள்ளிகளை பெற்றுள்ள கோலி, அடுத்த டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடி, கூடுதலாக ஒரு புள்ளியை பெற்றால், ஹைடன், காலீஸ், டிவில்லியர்ஸ் ஆகியோரது இடங்களை சமன் செய்துவிடுவார்.

டெஸ்ட் அரங்கை பொறுத்தவரை, அதிக புள்ளிகள் கொண்ட வீரர்கள் பட்டியலில், 961 புள்ளிகளுடன் பிராட்மேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆனாலும் இந்த சாதனையை எட்டுவது, கோலிக்கு பெரிய சிரமமாக இருக்காது என்பதே ரசிகர்களின் நம்பிக்கை.

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அந்நிய மண்களில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட, இந்திய வீரர்கள் சற்று தடுமாறினாலும், இதற்கு விதிவிலக்காக இருக்கும் கேப்டன் கோலி, அணியின் ஆபத்பாந்தவன் என்றால், அது மிகையாகாது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )