இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

October 6, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3742 Views

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பிரித்விஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு, 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2-ம் நாள் ஆட்டமுடிவில் 6 விக்கெட் இழப்புக்கு, 96 ரன்கள் என்ற ஸ்கோருடன் வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய சேஸ் அரை சதம் கடந்தார். சேஸ் 53 ரன்களிலும், லெவிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கிமோ பால் 47 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, 181 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

468 ரன்களுடன் இந்திய அணி முன்னிலை பெற்றதால், மேற்கிந்திய தீவுகள் அணி ஃபாலோ ஆன் பெற்றது. இதனையடுத்து  மேற்கிந்திய தீவுகள் அணியை மீண்டும் பேட்டிங் செய்ய, இந்திய அணி பணித்ததால், 2வது இன்னிங்சை மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடியது. இரண்டாது இன்னிங்சிலும் இந்திய அணி வீரர்கள் அபார பந்து வீச்சை வெளிப்படுத்தினர். குறிப்பாக இந்திய அணியினரின் சுழற்பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பாவெல் மட்டும் 83 ரன்கள் குவித்தார். இறுதியில் அந்த அணி 196 ரன்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )