இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​ டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்த விராட் கோலி!

August 5, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4709 Views

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

2011ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பேட்ஸ்மென் ஒருவர் டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 149 ரன்கள் குவித்த விராட் கோலி, 2வது இன்னிங்சில் 51 ரன்கள் எடுத்தார்.

மொத்தம் 200 ரன்கள் எடுத்த நிலையில், தரவரிசையில் 31 புள்ளிகள் முன்னேறி, 934 புள்ளிகளை எட்டினார். இதன் மூலம் 929 புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்தார்.  

டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால், ஓராண்டு வரை கிரிக்கெட் விளையாட ஸ்டீவ் ஸ்மித்திற்கு தடை விதிக்கப்பட்டது. தடை அமலில் இருந்தாலும், அதற்கு முன்பாக விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஜொலித்த காரணத்தால், கடந்த 32 மாதங்களாக அசைக்க முடியாத வகையில் முதலிடத்திலேயே ஸ்மித் தொடர்ந்து வந்தார். இந்நிலையில், தற்போது அவரை விராட் கோலி பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )