முகப்பு > விளையாட்டு

ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

September 04, 2017

ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை வாங்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!


ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை 16 ஆயிரத்து 347 கோடி ரூபாய்க்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதன் ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் பெற்று ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் சோனி நிறுவனத்துடன் இந்த ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், இன்று ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏலம் மும்பையில் நடைபெற்றது.

அப்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றது. இதற்காக அந்நிறுவனம் ஏலத்தொகையாக பிசிசிஐக்கு 16 ஆயிரத்து 347 கோடி ரூபாய் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. 

இதன் மூலம் வரும் 2022ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை அந்நிறுவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்