முகப்பு > விளையாட்டு

5-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாதனை!

September 04, 2017

5-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாதனை!


இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும், இந்தியா வெற்றி பெற்றுத் தொடரின் ஐந்து போட்டிகளையும் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது. 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 238 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க வீரர் உப்புல் தரங்கா 48 ரன்கள் எடுத்தார். லாகிரு திரிமன்னே 67 ரன்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 55 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் கேப்டன் விராட் கோலி இறுதிவரை களத்தில் நின்று, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 46.3 ஓவர்களில்,  4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் விராட் கோலி 110 ரன்கள் எடுத்தார். கேதார் ஜாதவ் 63 ரன்கள் எடுத்தார்.

இதனால் இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இலங்கையை 5-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. மேலும்  மகேந்திர சிங் தோனி 100 ஸ்டம்பிங் செய்து உலக சாதனை படைந்துள்ளார். கேப்டன் விராட் கோலி 30 சதங்களை அடித்து சச்சின் டெண்டுகலின் 49 சதங்கள் என்ற சாதனையை வேகமாக நெருங்கி வருகிறார். 

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்