இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 2 வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

August 4, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5189 Views

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டிக்கு பி.வி. சிந்து  2 வது முறையாக முன்னேறினார்.  

சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்திய விராங்கனை பி.வி. சிந்து,  ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்டார்.

இதில் பி.வி. சிந்து முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால், யமாகுச்சி 2 வது செட்டை மிகுந்த நெருக்கடியுடன் எதிர்கொண்டார். அதன் விளைவாக இரண்டாவது செட்டில் இருவருக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது. இரண்டாவது செட்டில்  இருவரும் போட்டி போட்டு புள்ளிகளை பெற்று வந்தனர். இறுதியில் பி.வி.சிந்து 24-22 என்ற கணக்கில் 2 -வது செட்டை கைப்பற்றினர். இப்போட்டியில் 21-16, 24- 22 என்ற நேர்செட்டுகளில் அகனே யமகுச்சியை வீழ்த்தி, இறுதிபோட்டிக்கு பி.வி. சிந்து முன்னேறினார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து இதுவரை 2 வெண்கலம் மற்றும் 1 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை வென்றுள்ளார், தற்போது, இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அவர் குறைந்தபட்சம் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
 
இதனையடுத்து இறுதிபோட்டியில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை  எதிர்கொள்கிறார். 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )