இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி: பென் ஸ்டோக்ஸ் அசத்தல்!

August 4, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4800 Views

பர்மிங்காமில் நடைபெற்ற  இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 80 ரன்னும், விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ 70 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய இந்திய அணி, கேப்டன் விராட்கோலியின் (149 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.  இந்நிலையில், நேற்று 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 53 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சரிவர விளையாடதா நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை என்ற நிலையில் விராத் கோலி 43(76) ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18(44) ரன்களுடனும் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே தினேஷ் கார்த்திக் 20 ரன்களில் ஆண்டர்சன் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். பின்னர் ஹர்திக் பாண்டியா, கேப்டன் விராட் கோலியுடன் கைகோர்த்தார். வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷ பந்து வீச்சை சமாளித்து இந்த ஜோடி விளையாடி வந்தது. 

இதனிடையே தனக்கே உரிய சிறப்பான ஆட்டத்தின் மூலம் அரைசதம் கண்ட விராட் கோலி, 51 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். கோலியை அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய போதிலும், தனிஒருவனாக வெற்றிக்கு கடுமையாக போராடிய ஹர்திக் பாண்டியா, 31 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேற இந்திய அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும்,  தனது 1,000-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டது இங்கிலாந்து அணி.

ரன் விவரம்: இங்கிலாந்து அணி 287, 180; இந்திய அணி 274, 162 எடுத்தன 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )