இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​ “நாடு திரும்பினால் கொலை செய்யப்படுவீர்கள்” - சொந்த நாட்டு ரசிகர்களால் கொலம்பிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு கொலை மிரட்டல்

July 4, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6016 Views

உலகக்கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்று ரசிகர்களால் சுட்டிக்காட்டப்படும் கொலம்பிய வீரர்களுக்கு சொந்தநாட்டு ரசிகர்களே கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் பரபரப்பான நாக் அவுட் போட்டிகள் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் கொலம்பிய அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் போட்டி நடைபெற்றது. வாழ்வா சாவா என்ற அந்த ஆட்டத்தில் மோதிய இரு அணிகளுமே தலா ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 3-4 என்ற கோல்கள் அடிப்படையில் கொலம்பிய அணியை இங்கிலாந்து வீழ்த்தியது.

கொலம்பிய அணியைச் சேர்ந்த Mateus Uribe மற்றும் Carlos Bacca ஆகிய வீரர்கள் பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க தவறியதே அணியின் தோல்விக்கு காரணம் என்பதால் அந்த வீரர்கள் இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இருவரும் சொந்த நாட்டிற்கு திரும்பத் தேவையில்லை என்றும் மீறி கொலம்பியாவிற்கு வந்தால் கொலை செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரு வீரர்களும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இதனை வெறும் மிரட்டலாக எடுத்துக் கொள்ள இயலாது என்பதை அந்த வீரர்கள் அறிவர், ஏனெனில் கடந்த 1994ஆம் ஆண்டில் இதே போன்று உலகக் கோப்பையில் கொலம்பிய அணி தோல்வி அடைந்த போது, Moscow Escobar என்ற வீரர் அடித்த சுய கோலே அதற்கு காரணம் எனக் கூறி ரசிகர் ஒருவரால் அவர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

நேற்று தான் Moscow Escobar-ன் 24வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது, தற்சமயம் இத்தனை ஆண்டுகள் கழித்து அதே போன்று தோல்வியை காரணம் காட்டி வீரர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சுட்டுவீழ்த்தப்பட்ட Moscow Escobar-ன் சகோதரர் சாச்சி என்பவர் இது தொடர்பாக பேசும் போது, தன்னுடைய சகோதரர் சுடப்பட்ட நிகழ்வில் இருந்து ரசிகர்கள் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும், விளையாட்டை விளையாட்டாக அணுக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )