முகப்பு > விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!

August 30, 2017

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டாக்கா டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது வங்கதேச அணி.

வங்கதேசம் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி, வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 27ம் தேதி தொடங்கியது.

இப்போட்டியில் முதலில் விளையாடிய முஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 217 ரன்களுக்கு சுருண்டது. 

43 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணி, 221 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் சுருண்டது. 265 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சாகிப் அல் ஹாசனின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் சதமடித்த போதிலும் பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 244 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலிய அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக வெற்றிப் பெற்று வங்கதேச அணி சாதனை நிகழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்