இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

சூதாட்டப்புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் தடை..!!

August 30, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7488 Views

சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற்ற இதன் 2வது சீசனில் ‘இஸ்லாமாபாத் யுனைட்டட்’ அணியில் பங்கேற்று விளையாடிய சர்ஜீல் கான் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

பெஷாவர் ஸல்மி அணிக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமலும், அவுட் ஆகி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியே சர்ஜீல் கானை பாகிஸ்தான் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

அவர் மீதான புகார் குறித்து ஊழல் தடுப்பு பிரிவில் விசாரணை நடந்து வந்த நிலையில் 28வயதான சர்ஜீல் கான் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. அவர் தற்காலிகமாக நீக்கப்பட்ட தினத்தில் இருந்து இத்தடை அமலுக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)