இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை: 4வது முறையாக கைப்பற்றிய இந்திய அணி

February 3, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4000 Views

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

நியூஸிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. 47.2 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 216 ரன்கள் எடுத்தது. ஜோனாதன் மெர்லோ, 102 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அந்த அணி ரன்கள் குவிக்க வழிவகுத்தார்.

இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி, எனும் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின்  துவக்க ஆட்டக்காரர்கள் ப்ரித்வி ஷா, மஞ்சோத் கல்ரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 23 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

மழை நின்றதையடுத்து, ஆட்டத்தை தொடர்ந்த ப்ரித்வி ஷா, 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சுப்மான் கில் 31 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய மஞ்சோத் கல்ரா- ஹர்விக் தேசாய் ஜோடி ஆட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது. 38.5 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு இந்தியா 220 ரன்கள் எடுத்து, கோப்பையை கைப்பற்றியது. 

அதிரடியாக விளையாடிய மஞ்ஜோத் கல்ரா, 102 பந்துகளுக்கு 101 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி, என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அணியின் வெற்றிக்கு உதவிய மஞ்ஜோத் கல்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கருதப்படும் இங்கிலாந்து, டெஸ்ட்

தற்போதைய செய்திகள் Sep 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )