இன்றைய வானிலை

  • 33 °C / 92 °F

Jallikattu Game

உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

February 3, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8720 Views

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, 4-ஆவது முறையாக இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு, தலா 30 லட்சம் ரூபாயை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. மேலும், அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கு, 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள், வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

Categories: விளையாட்டு
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலககோப்பை கால்பந்து தொடரின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்

உலக கோப்பை கால்பந்து ஜூரம் வாட்டி கொண்டிருக்கிற வேளையில்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்துள்ள

உலககோப்பை கால்பந்து தொடரில், செனகல் அணி போர்ச்சுக்கல்

குரூப் H பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் பலம்

தற்போதைய செய்திகள் Jun 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 78.89 /Ltr (₹ -0.15 )
  • டீசல்
    ₹ 71.44 /Ltr