முகப்பு > விளையாட்டு

குர்மீத் ராம் ரஹீமிடம் ஆசி பெற்ற விராட் கோலி!

August 29, 2017

குர்மீத் ராம் ரஹீமிடம் ஆசி பெற்ற விராட் கோலி!


பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹீமிடம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆசி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

பெண் சீடர்கள் இருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த சாமியாரிடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் ஆசி பெற்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட வீடியோ நெட்டிசன்களால் வைரலாக பரவப்பட்டுவருகிறது. 


முன்னதாக சாமியார் ராம் ரஹீம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஜஹீர்கான், யூசுஃப் பதான் ஆகியோர் சர்வதேச அளவில் சிறந்த வீரர்களாக விளங்குவதற்கு பயிற்சி அளித்ததாக கூறினார். மேலும் சில விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்